முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், தேர்தலுக்குப்பின் அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மனவேதனையை உண்டாக்கிவிட்டது. லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையும் இதுதான். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்துக்கு இந்த கதியா? உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுவதாக ஆங்கில நாளிதழ்கள் பரிகாசகம் செய்கின்றன என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். செம்மலையின் விலகல் சேலம் மாவட்ட அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.