சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினித்(26) மற்றும் அவரது தம்பி விக்னேஷ்(24), ஆகாஷ்(23), சீனிவாசன்(26), அருள்குமார்(26) ஆகிய ஐந்து பேர் கடந்த 2023 ஏப்ரல் மாதம் ஒரு மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.