ஊட்டி அருகே நடுப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கலையரசி(34), உடல்நலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது கணவர் பழனிசாமியை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று (மே 19) காலை மருத்துவமனை கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அவரை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.