இதனிடையே நேற்று காலை 6 மணிக்கு மேல் மாடிக்கு சென்ற குப்பாயி தனது மகன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாந்தகுமார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது