சேலம்: 100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் குடும்பத்தினர் கொண்டாட்டம்

சேலம் அருணாச்சல ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. இவருக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி அவர்களும் பேரன், பேத்திகளுடன் சேலம், கோவை, கரூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஐந்து தலைமுறையை பார்த்த மூதாட்டி சரஸ்வதிக்கு நேற்றுடன் 100 வயது பூர்த்தியாகியுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்து, நேற்று சதாபிஷேகம் மற்றும் பிறந்தநாள் விழாவை உற்சாகமுடன் கொண்டாடினர். இந்த விழாவில் சரஸ்வதியின் மகன்கள், மகள்கள் மற்றும் பேரன் பேத்திகள், கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 60 பேர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி பாட்டிக்கு கேக்குட்டி மகிழ்ந்தனர். மேலும் சரஸ்வதியின் இரண்டாவது மகன் சர்வேஸ்வரன் 70 வது பிறந்தநாளையும் குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடினர். 

தொடர்ந்து விழாவில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாட்டியிடம் ஆசிபெற்றனர். அந்த காலத்தில் நல்ல உணவு முறைகளும் பழக்க வழக்கங்களின் காரணமாக நீண்ட ஆயுளுடன் பாட்டி இருந்ததாகவும் நூறு வயது பாட்டியின் பிறந்த நாளை கொண்டாடியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி