இதனை தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலில் தேரோட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தும், விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக சிறப்பு நிர்வாக நடுவர் பாலாஜி, மனுதாரர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் தாமோதரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்பட இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தேர் வெள்ளோட்டம் எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தேர் செய்யும் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்