சேலம் நகரக் கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் நகர கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிந்தார். சேலம் நகர கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்து தங்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி