சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த மின்பாதை ஆய்வாளர் துரைசாமி (55), குமரன் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.