இந்த 4 மாவட்டங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தவும், அவர்களுக்கு விரைவில் பணி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிகளில்
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அந்தந்த மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளில் தேர்தல் பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓய்வுபெற்ற போலீசார், வனத்துறையினர், முன்னாள் ராணுவத்தினரும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.