சேலம்: சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி

சேலம் எருமாபாளையம் பகுதியில் நேற்று (மே 28) காலை, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் சாலை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து திருப்பூருக்குச் சென்ற ஆம்னி பேருந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முதியவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிச்சிபாளையம் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி