சேலம்: மது அருந்தி மயங்கி விழுந்த முதியவர் பலி

எருமாபாளையம் ஊராட்சி ஆலமரத்துகாடு அய்யனாரப்பன் கோவில் அருகே மே 27 காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து அவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த செல்வமணி என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஏற்பட்ட போதை மயக்கத்தில் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி