பின்னர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி முதியவரை தேடினர். அப்போது முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு முதியவர் சுந்தரத்தின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீராணம் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்