சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

சேலம் நரசோதிப்பட்டி ஓம்சக்தி நகரை சேர்ந்த முனுசாமி (74) மற்றும் வின்சென்ட் பகுதியை சேர்ந்த சேகர் (50) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தனர். மீட்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி முனுசாமி உயிரிழந்தார். சேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி