வீராணம் அருகே முதியோர் தம்பதி விஷம் குடித்து தற்கொலை

வீராணம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் கல்பனா தம்பதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி கணவர் அன்பழகன் உயிரிழந்தார். மனைவி கல்பனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்பழகன் விஷம் அருந்துவதற்கு முன், கனடாவில் உள்ள மகனுக்கு வாட்ஸ்அப்பில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தகவல் அனுப்பியுள்ளார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி