தொடர் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் (பிப்ரவரி) மட்டும் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 208 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 197 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அடுத்தடுத்து ரத்தாகும் விஜய் பிரசாரம்: தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி