தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ந் தேதி தி. மு. க. ஆர்ப்பாட்டம்

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. தலைமை தாங்குகிறார். மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட, மாநகர தலைவர்கள், செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட, ஒன்றிய, ஊராட்சி கிளை செயலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி