சேலம்: மத்திய அரசை கண்டித்து தி. மு. க. வினர் நாளை ஆர்ப்பாட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி ரூ.4,034 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. 

இதைக் கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம் காரிப்பட்டி ஊராட்சியில் எனது தலைமையில் (எஸ்.ஆர். சிவலிங்கம்) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதேபோன்று வாழப்பாடி வடக்கு ஒன்றியம் சந்திரபிள்ளை வலசு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, கெங்கவல்லி ஒன்றியம் உலிபுரம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மல்லியக்கரை, திருமலைக்கிரி, வட்டமுத்தாம்பட்டி, அரியானூர், இரும்பாலை, தும்பல்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி, ஏற்காடு பஸ் நிலையம், அயோத்தியாப்பட்டணம், வலசையூர், வீராணம், குறிச்சி, முத்தம்பட்டி, திருமானூர், ஓலப்பட்டி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

மேலும் பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை, கல்லாநத்தம், கடம்பூர், தலைவாசல், காமநாயக்கன்பாளையம், நாவக்குறிச்சி, காட்டுக்கோட்டை, கவர்பனை, இலுப்பநத்தம் ஆகிய இடங்களிலும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி