சேலத்தில் திமுக பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கான திமுக பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், முகவர்கள், பார்வையாளர்கள், வக்கீல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள மதன்லால் மைதானத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்குகிறார். திமுக செயலாளர்கள் ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி எம்.பி., எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி