ஆனால் அவர் சரியான முறையில் பதில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் மேற்பார்வையாளர் கஜேந்திரனை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘வேலைக்கு சரியாக வருவது இல்லை. மேலும் நிர்வாகத்திற்கு எதிராகவும் கஜேந்திரன் செயல்பட்டு வந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டும் அவர் பதில் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.