தவெக நிர்வாகிகள் சந்திப்புகூட்ட மைதானத்தை துணை கமிஷனர் ஆய்வு

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ள த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 51 விதிமுறைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாநகர காவல் துறை துணை ஆணையாளர் கேழ்கர் பாலச்சந்திரா மற்றும் உதவி ஆணையாளர் பரவாசுதேவன் ஆகியோர் கூட்டம் நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்டத்திற்கு வருபவர்களுக்கு அனுமதி வழங்குவது, ஆம்புலன்ஸ் நிறுத்துவது உள்ளிட்ட பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி