தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கோரிக்கைகள் மத்திய அரசை வலியுறுத்தி வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும் என பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பி சேலம் மாவட்டம் பொறுப்பாளர் கொண்டலாம்பட்டி எம். தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.