சேலம்: விஜய் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தவெக கூட்டத்தில் முடிவு

சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ. பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 22-ந் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் ஆலோசனை வழங்கினார். 

மேலும், புதிதாக மகளிர் அணிகள் தொண்டர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். மாணவரணி நிர்வாகிகள் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். விலையில்லா முட்டை, பால் திட்டம் அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்த வேண்டும். மாவட்டம் ஒன்றிய பகுதிகளில் ரத்ததான முகாம் செயல்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட வேண்டும். விலையில்லா சவ குளிரூட்டும் 25 பெட்டிகள் தொகுதி முழுவதும் வழங்கப்படும். 30 வயதிற்கு கீழ் இருக்கும் கட்சியினர் உடற்பயிற்சியும் 40 வயதிற்கும் மேற்பட்ட கட்சியினருக்கு நடைப்பயிற்சியும் கட்டாயமாக தினமும் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி