சேலத்தில் மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜம்பு தலைமையில், தலைவர் அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதில் நர்சுகள், அமைச்சு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி