இதனை அங்கு காவலாளியாக வேலை செய்து வரும் 2 பேரும் உறுதிப்படுத்தினர். அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்திற்குள் செல்ல விட தடுத்தால், காவலாளிகளை அந்த வாலிபர்கள் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(அக்.05) மதியம் 2 வாலிபர்கள் அந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்திற்கு சென்று போதை ஊசியை தங்களது கையில் ஏற்றி போதையில் மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்த ஒருவர், அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
தங்களை வீடியோ எடுப்பதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதை ஊசிகளை பயன்படுத்திய வாலிபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.