பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கூட்டுறவு வார விழா போட்டிகள்

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் 72-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் குறித்த விவரங்கள் மற்றும் பதிவு செய்யும் முறைகள் குறித்து கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவ-மாணவிகள் icmsalem@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும், நேரிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி