நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு வாரவிழா

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. துணைப்பதிவாளர் தஸ்திகீர் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 140 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்வில் மேலாண்மை நிலைய அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி