இந்த விபத்தில் டிரைவர் பங்கஜ் யாதவ் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். மேலும் கன்டெய்னர் லாரியின் டேங்கரில் இருந்து டீசல் வடிந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர். இருப்பினும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எப்படி? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்