சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த 60 வயது கட்டிடத் தொழிலாளி தனபால், கோரிமேடு பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது சிறுவன் உட்பட இருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னங்குறிச்சி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.