மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ்கட்சியினர் உண்ணாவிரதபோராட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், பாஜகவை கண்டித்து ஏ. ஆர். பி. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட தலைவர் பாஸ்கர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்காக கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை பாஜக குறைத்துள்ளதாகவும், தமிழகம் போன்ற பாஜக ஆளாத மாநிலங்களுக்கு முறையாக நிதி வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இத்திட்டத்தின் பெயரை மாற்றியதுடன், திட்டத்தையே முடக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி