சேலம் மாநில கராத்தே போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

சேலம் பத்மவாணி கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் இந்திய ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் மவாதே கா கராத்தே பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் கட்டா பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று கோப்பை மற்றும் சைக்கிள் பரிசு பெற்று உள்ளனர். 

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் அல்தாப் அலாம், தலைவர் ஜேக்கப் தேவகுமார், டெக்னிக்கல் குழு தலைவர் எஸ். கலைமணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற கராத்தே வீரர், வீராங்கனைகளை சேலம் சங்கத்தின் நிர்வாகிகள் சீனிவாசன், செண்பகராஜ், சரவணன், ராஜமாணிக்கம், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனரும், தேசிய பயிற்சியாளருமான சுதாகர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி