அதன் அடிப்படையில் விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் வாழப்பாடி பகுதியை சேர்ந்த ரேவதி கடந்த 23-06-2024 ஆம் ஆண்டு சாமியாபுரம் பகுதியில் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஏர்வாடி பகுதியில் டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார். இந்த வழக்கு சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காணப்பட்டு ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனம் மூலம் 22 லட்சம் ரூபாய் கணவர் சுதாகர் மற்றும் அவருடைய மூன்று குழந்தைகளுக்கு மாவட்ட நீதிபதி சுமதி வழங்கினார். இதேபோல பல்வேறு வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு இழப்பீடு தொகையாக ரூ.86 லட்சத்திற்கான காசோலைகளை முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.