சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலக தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், மேயர் ராமச்சந்திரன் மற்றும் அருள் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன.