சேலம் அம்மாப்பேட்டை மண்டல பகுதிகளில் திடக்கழிவு வாகனங்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதை ஆணையாளர் இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தார். பருவமழை தொடங்குவதால், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார். ஊழியர்களிடம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.