நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைதானத்தில் கமிஷனர் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள மையத்தை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் ஆய்வு செய்தார். இதேபோல், செட்டிச்சாவடியில் உள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தையும், தாதகாப்பட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி