சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி ஜெயலட்சுமி நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், தந்தை தீனதயாளன் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ருக்மணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.