சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 48 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் கல்லூரி மற்றும் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கலாம். அவர்களுக்கு 3 வேளை உணவு, சீருடை வழங்கப்படும். விருப்பமுள்ளோர் வருகிற 18-ந்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.