கோவையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-03680) இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணி நேரம் 25 நிமிடம் கால தாமதமாக கோவையில் இருந்து மாலை 4. 15 மணிக்கு புறப்படுகிறது. இந்த தாமதத்தால் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.