இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த சில நாட்களாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், இருக்கைகள், நாற்காலி, டேபிள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சேலம் மாநகராட்சி மணக்காடு காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் பள்ளிக்கூடத்தில் உள்ள குடிநீர் தொட்டி, மைதானம், கழிவறை ஆகியவற்றை தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.