இதில் கலைஞர் எழுத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், கவிஞர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், மொழியின் நாயகர் முத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பின் கீழ் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. முதல் நாளான இன்று சேலம் மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் கருத்து, நடை, மொழி ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய முதல் மூன்று மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 7000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அரசு மகளிர் கலைக் கல்லூரியின் முதல்வர் காந்திமதி கலந்து கொண்டு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.