கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்துவர்கள் சிறப்பு பிரார்த்தனை

சேலம் நான்கு ரோடு குழந்தை யேசு பேராலயம் முன்பு உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி கடைபிடிக்கும் கல்லறைத் திருநாளை முன்னிட்டு, தங்கள் முன்னோர்களை போற்றி பிரார்த்தனை செய்தனர். குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள், முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்திகள் ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி