மரத்தில் துளையிட்டு பதுக்கி வைத்திருந்த செல்போன் மீட்பு

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் செல்போன், கஞ்சா, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சிறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 8-வது பிளாக் பகுதியில் ஒரு மரத்தில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறை சோதனை குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அந்த மரத்தை சோதனையிட்டபோது, மரத்தில் துளையிட்டு அதற்குள் செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனை சிறை அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி