சேலம் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன், கஞ்சா பறிமுதல்

கொலை வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன் (35) என்பவர் செல்போன் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது அறையை சோதனை செய்தபோது செல்போன், பேட்டரி மற்றும் கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. சிறைத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி