சேலம்: சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறுப்புகள் தானம்

காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (26). இவர் நாமக்கல்லுக்கு டூவீலரில் சென்றபோது சாலை விபத்தில் படுகாயம் அடைந்தையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சூர்யா மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் சூர்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, சூர்யாவின் நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகம், 2 கண்கள் ஆகியவற்றை அறுவை தானமாக வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி