இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் (மார்ச் 29) சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, நாய் கடித்து பல நாட்கள் ஆகியும் அது பற்றி சிறுவன் பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளான். இதனால் நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய் பாதித்து சிறுவன் இறந்துள்ளான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள், மாணவர்கள் வீட்டில் இருப்பார்கள். அப்போது வீட்டில் வளர்க்கும் நாய்களின் உமிழ்நீர் பட்டாலே அதற்கான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?