சேலம் கிழக்கு மாவட்ட பா. ஜனதா வக்கீல் அணி துணைத்தலைவர் அஜீத் சாக்கோ, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்து மக்களின் முதன்மையான கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த பக்தி பாடலான ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடல், இழிவுபடுத்தி பாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, பாடகர் வேல்முருகன் தவெக தலைவர் விஜய் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.