சேலம்: மதுபாட்டில் மாலையாக அணிந்து மனு கொடுத பாஜக நிர்வாகி

சேலம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகி முருகன், சூரமங்கலம் புதுரோடு பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி, காலி மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு கொடுக்க வந்தார். கோவில்கள், பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம் அருகே கடைகள் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

தொடர்புடைய செய்தி