சேலத்தில் சாரணர் இயக்க நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்

சேலம் நேசக்கரங்கள் இல்லத்தில் சாரணர் இயக்க நிறுவனர் சர்லார்டு பேடன் பவுல் பிறந்தநாள் விழா தலைவர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. இல்ல கண்காணிப்பாளர் மதன் வரவேற்றார். விழாவில் பொருளாளர் பாலசங்கர், மேலாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். செயலாளர் பெரியசாமி போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, சர் லார்டு பேடன் பவுல் உருவப்படத்திற்கு சாரண-சாரணிய மாணவிகள் மரியாதை செலுத்தினர். விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி