மேலும் 34-வது வார்டு முழுவதும் ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தாத மாசில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்களிடம் வார்டு கவுன்சிலர் ஈசன் இளங்கோ துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 1, 200 கொடிய நோய்களை பரப்பும் கொசுக்களை உண்டு, அவற்றை அழிக்கும் வல்லமை பெற்றவை. வவ்வால்கள் ஒவ்வொரு நாளும் தனது உடல் எடைக்கு நிகரான உணவை உண்டு செரிக்கிறது.
அவை தீவிரமாக பூச்சிகளை சாப்பிடுவதால்தான் உலகில் பூச்சியினங்களின் அபரிமிதமான பெருக்கம் ரசாயன மருந்துகளின்றி கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் வவ்வால்கள் பழங்கள், பூக்கள், தளிர்கள் போன்றவற்றை தின்பதன் மூலம் விதைப்பரவல், மகரந்த சேர்க்கைக்கு பெரும் பங்காற்றுகின்றன. எனவே வவ்வால்களை நாம் காப்போம் என்று கூறி அவர் பிரசாரம் செய்தார்.