பிப்ரவரி 9-ந்தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகரில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆத்தூர், தலைவாசல், மேட்டூர் அரசு, தனியார் கல்லூரிகளிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.