சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சார்பில், போக்சோ சட்டம் குறித்து தனியார் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகனாம்பாள் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், கேலி, கிண்டல் செய்தால் ஆசிரியரிடமோ பெற்றோரிடமோ தெரிவிக்க வேண்டும், குழந்தை திருமணம் அல்லது தொந்தரவு ஏற்பட்டால் 1098 எண்ணில் புகார் தெரிவிக்கலாம், அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசக்கூடாது, செல்போனில் சுய விவரங்கள், புகைப்படங்களைப் பகிரக்கூடாது போன்ற முக்கிய விழிப்புணர்வு தகவல்களை போலீசார் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.